மயிலம் அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறி
மயிலம் அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்து சென்றனா்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் பாஸ்கர் (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் மளிகை பொருட்களை ஏற்றிகொண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மயிலம் அருகே உள்ள கேனிப்பட்டு என்ற இடத்தில் வந்த போது, லாரியை திருநங்கை ஒருவர் வழிமறித்துள்ளார்.
இதையடுத்து லாரியை நிறுத்திய பாஸ்கர், கீழே இறங்கி பேசிய போது, திருநங்கையுடன் இருந்த 2 பேர் லாரி டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் வைத்திருந்த 1500 ரூபாய் பணத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story