காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்


காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
x
தினத்தந்தி 15 March 2021 12:15 AM IST (Updated: 15 March 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடியில் மிளகாய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

இளையான்குடியில் மிளகாய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் அறிக்கை

சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து கூறி இருப்பதாவது:-
மானாமதுரை-கிருஷ்ணராஜபுரத்தில் ைவகை ஆற்றின் மேல் மேம்பாலம் கட்டப்படும். காரைக்குடி அருகே கோவிலூரில் உள்ள தமிழ்நாடு வேதியியல் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் வேதியியல் பொருட்களை சுத்திகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மானாமதுரை தாலுகாவில் 14 கிராமங்கள் பயன்பெறும் வகையில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த நாட்டார் கால்வாய் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

மாநகராட்சி

சிவகங்கை மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும். கணியன்பூங்குன்றனார் பெயரில் கலையரங்கம் ஒன்று கட்டப்படும். தேவகோட்டையில் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். இளையான்குடி தொகுதியில் சூராணம் பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் காரைக்குடி, சிங்கம்புணரி, இளையான்குடி, மற்றும் சிவகங்கைக்கு நீட்டிக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும். எஸ்.புதூர் ஒன்றியத்தில் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்படும்.

மிளகாய் கொள்முதல் நிலையம்

காரைக்குடியில் பெண்கள் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். காரைக்குடி-கோட்டையூர்-ஸ்ரீராம் நகரில் ரெயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை ேமற்கொள்ளப்படும்.
காரைக்குடியில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும். திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். இளையான்குடியில் மிளகாய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.

சமத்துவபுரம் திறக்கப்படும்

முல்லை பெரியாறு மற்றும் காவிரி, குண்டாறு ஆகிய நதிகளை இணைத்து சிவகங்கை மாவட்டத்தின் பெரும் பகுதியில் பாசன வசதி மேம்படுத்தப்படும். திருப்பத்தூர் அருகில் உள்ள வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி மேம்படுத்தப்படும்.
சிங்கம்புணரியில் கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் பெரியார் நினைவு சமத்துவப்புரம் திறக்கப்படும். ஏரி, குளம், குட்டைகள் மற்றும் வடிகால் வரத்துக்கால்வாய்கள் சீர் ெசய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story