மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.83 ஆயிரம் பறிமுதல்


மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.83 ஆயிரம் பறிமுதல்
x

திருவாரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.83 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்:
திருவாரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.83 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
பறிமுதல்
நேற்று திருவாரூர் அருகே லெட்சுமாங்குடியில் வட்ட வழங்கல் அலுவலர் கணேசன் தலைமையில் போலீசார் அடங்கிய நிலை கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். . அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த ஹலிலூல் ரகுமான் எந்தவித ஆவணங்கள் இன்றி ரூ.83 ஆயிரத்து 400-ஐ கொண்டு சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நிலை கண்காணிப்புக்குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து திருவாரூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான நக்கீரனிடம் ஒப்படைத்தனர். இந்த பணம் உடனடியாக மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story