வாக்குச்சாவடிகளை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தல்
அனைத்து வாக்குச்சாவடிகளையும் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
நெல்லை:
அனைத்து வாக்குச்சாவடிகளையும் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் கூறுகையில், 'போலீஸ் அதிகாரிகள் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சட்ட விரோத செயல்கள் எதுவும் நடக்காத வண்ணம் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும். எல்லை பாதுகாப்பு படையினர் மூலம் கொடி அணிவகுப்பு பதற்றமான பகுதியில் நடத்தப்பட வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜ், சீமைசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரான்சிஸ், அர்ச்சனா, உதயசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
100 சதவீதம் வாக்களிக்க...
நெல்லை சட்டசபை தொகுதிக்குட்பட்ட கண்டியபேரி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் போலீசாருடன் சென்று ஆய்வு நடத்தினார்கள்.
மேலும் அந்த பகுதியில் போலீஸ் கொடிஅணிவகுப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்களிடம் எந்தவித பயமும் இன்றி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story