பாபநாசம் அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பு: நெல்லையில் அரசு பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
நெல்லையில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்து உள்ளது.
நெல்லை:
நெல்லையில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்து உள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியீடு
தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
* தனியார் குளிர்பான நிறுவனங்கள் நீராதாரங்களில் இருந்து நீர் எடுப்பதை தடுக்கவும், அந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* திசையன்விளை பகுதிக்கு தாமிரபரணி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும்.
* கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் இருந்து சுசீந்திரத்தில் நீர் மேலேற்றும் நிலையம் அமைத்து குழாய்கள் மூலமாக ராதாபுரத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* குலவணிகர்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* அம்பை, கல்லிடைக்குறிச்சியில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
* கூடங்குளம் அணுமின்நிலையம், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
பல் மருத்துவ கல்லூரி
* ராதாபுரம், பணகுடி ஆகிய ஊர்களில் புறவழிச்சாலையில் மேம்பாலங்கள் கட்டப்படும்.
* வீரவநல்லூரில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.
* மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு மாதம் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
* தாமிரபரணி, கருமேனியாறு, பச்சையாறு, எலுமிச்சை ஆறு, நம்பியாறு ஆகியவற்றை இணைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
* நாங்குநேரியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.
* கங்கைகொண்டானில் ெதாழிற்பூங்கா மீண்டும் ெசயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
* நெல்லையில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* ராமையன்பட்டியில் உள்ள குப்பைக்கிடங்கு நகரத்திற்கு வெளியே மாற்றப்படும்.
* நெல்லையில் அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும்.
* பீடித்தொழிலாளர்கள் மற்றும் பனைத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க நலவாரியங்கள் அமைக்கப்படும்.
* மணிமுத்தாறு அணையில் இருந்து உபரி நீர் கால்வாய்கள் மூலம் திசையன்விளை பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.
* ராதாபுரம் தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும்.
* நெல்லையில் சுற்றுச்சாலை அமைக்கப்படும்.
* நெல்லையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
* வடமலையான் கால்வாய் தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டத்தில் சேர்க்கப்படுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* நெல்லை, அம்பையில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
* கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* திசையன்விளையில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் நிைறவேற்றப்படும்.
* அம்பை அரசு ஆஸ்பத்திரி நவீனப்படுத்தப்படும்.
* கோதையாற்றின் குறுக்கே வெள்ளாங்குழி ஊராட்சி, முத்தாரம்மன் கோவில் அருகே மேம்பாலம் கட்டப்படும்.
ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பு
* பாபநாசம், சேர்வலாறு அணைகள் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டது போன்று, பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளும் சுரங்கப்பாதையால் இணைக்க ஆவன செய்யப்படும்.
* நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் சாலை விரிவுபடுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.
* விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அரசு மருத்துவமனையும், பஸ் நிலையமும் அமைக்கப்படும்.
* அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
* விவசாயத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story