டீக்கடையில் 1 லிட்டர் வெந்நீர் ரூ.20க்கு விற்பனை


டீக்கடையில் 1 லிட்டர் வெந்நீர் ரூ.20க்கு விற்பனை
x
தினத்தந்தி 15 March 2021 1:01 AM IST (Updated: 15 March 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் விலை உயர்வால் டீக்கடையில் 1 லிட்டர் வெந்நீர் ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை:
கியாஸ் விலை உயர்வால் டீக்கடையில் 1 லிட்டர் வெந்நீர் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 லிட்டர் வெந்நீர் ரூ.20க்கு விற்பனை
தமிழகத்தில் எந்த டீக்கடைக்கு சென்றாலும் குடிக்க தண்ணீர் கேட்டால் தயக்கமின்றி குடிநீரை வழங்கி வருவதில் முன்னணியில் உள்ளது டீக்கடைகள் மட்டுமே. மேலும் குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ வெந்நீர் கேட்டால், டீ போடுவதற்கு பாய்லரில் சூடாகி கொண்டே இருக்கும் வெந்நீரை தயக்கமின்றி பிடித்து கொடுப்பார்கள். இதை  இன்றும் டீக்கடைக்காரர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்தநிலையில் மயிலாடுதுறை பட்டமங்கல கடைவீதியில் உள்ள பிரபல டீக்கடையின் டேபிள் பக்கத்தில் ஒரு நோட்டீசை ஒட்டி  வைத்துள்ளனர். 
அதில் கியாஸ் விலை உயர்வு காரணமாக அரை லிட்டர் வெந்நீர் ரூ.10, 1 லிட்டர் வெந்நீர் ரூ.20, வென்னீர் இலவசம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கியாஸ் விலை உயர்வு
இதுகுறித்து டீக்கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், 2014-ம் ஆண்டு கடைகளுக்கு உபயோகப்படுத்தும் 19 கிேலா எடை கொண்ட கமர்சியல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,050 என்று விற்பனை செய்யப்பட்டிருந்தது. 
ஆனால் தற்போது ரூ.1,800 வரை விற்பனை செய்யப்படுகிறது. கியாஸ் விலை உயர்வினால் வெந்நீரை விற்பனை செய்யும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

Next Story