சிலம்பம் சுற்றி மாணவர்கள் விழிப்புணர்வு


சிலம்பம் சுற்றி மாணவர்கள் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 15 March 2021 1:03 AM IST (Updated: 15 March 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

சிலம்பம் சுற்றி மாணவர்கள் விழிப்புணர்வு

சாத்தூர்,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பேரணி, ரங்கோலி கோலம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. அதேபோல மாணவர்களும் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 
அந்த வகையில் சாத்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி படந்தால் வருவாய் ஆய்வாளர் பாலு முன்னிலையில் நடைபெற்றது. சாத்தூர் சிலம்பம் அகாடமி சார்பில் 5 வயது முதல் 15 வயதுடைய மாணவர்கள் 100 பேர் கலந்துகொண்டு 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி கையில் சிலம்பம் கொண்டு சுழற்றியவாறு சாத்தூர் பஸ் நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக படந்தால் வரை பேரணியாக சென்றனர். 
இதில் சிலம்பம் அகாடமி பயிற்சியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story