சிவகாசியில் கேக் கண்காட்சி
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிவகாசியில் கேக் கண்காட்சியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
சிவகாசி,
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிவகாசியில் கேக் கண்காட்சியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
கேக் கண்காட்சி
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிவகாசியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கேக் கண்காட்சி நடைபெற்றது.
இதை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட கேக் தயாரிப்பு நிறுவனங்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வித, விதமான கேக்குகளை தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தன.
தேர்தல் விழிப்புணர்வு
இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுசீட்டுக்குள் வழங்கப்பட்டது. பார்வையாளர்களுக்கு இலவசமாக கேக் வழங்கப்பட்டது.
இதேபோல் சிவகாசி பேஸ்புக் பிரண்ட்ஸ் மற்றும் அதிர்வு தமிழிசையகம் சார்பில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி சிவகாசி சிவன் கோவில் முன்பு பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
வாக்குச்சாவடி
இதில் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று வலியுறுத்தப் பட்டது. சிவகாசி சிவன்கோவில் அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதிரி வாக்குசாவடி அமைக்கப்பட்டு வாக்களிப்பது எப்படி என்று விளக்கப்பட்டது.
அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கலெக்டர் கண்ணன் பொதுமக்களுக்கு வாக்களிப்பது எப்படி என்று பயிற்சி அளித்தார். முதியவர்கள் பலர் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு விளக்கம் கேட்டனர்
Related Tags :
Next Story