வாணியம்பாடி தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிர்ப்பு


வாணியம்பாடி தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 March 2021 1:12 AM IST (Updated: 15 March 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிர்ப்பு

வாணியம்பாடி

வாணியம்பாடி சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வேட்பாளராக முகமது நயீம் போட்டியிடுகிறார். அவர் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக நேற்று காலை வாணியம்பாடி நகர தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் சென்றனர். 

அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சிலர் திடீரென அவரை (வேட்பாளர்) யாரென்று தெரியாது எனவும், முதல்-அமைச்சர் பழனிசாமி வாணியம்பாடிக்கு வந்த போது மலர் கொத்து கொடுத்து வரவேற்றவர். வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர்கபிலுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எப்படி நாங்கள் வேலை செய்ய முடியும். நீங்கள் உதயசூரியன் சின்னத்தை பெற்று வாருங்கள் எனக் கூறி கோஷம் போட்டனர். இதனால் வேட்பாளர் முகமது நயீம் மற்றும் நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர்.

Next Story