மூலைக்கரைப்பட்டி அருகே பஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்


மூலைக்கரைப்பட்டி அருகே பஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 March 2021 1:18 AM IST (Updated: 15 March 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டி அருகே பஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இட்டமொழி:

திசையன்விளையில் இருந்து நெல்லைக்கு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. மூலைக்கரைப்பட்டி அருகே முனைஞ்சிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக பஸ் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். லேசான காயம் அடைந்த மற்ற பயணிகள் முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று சென்றனர். 

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story