கியாஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் ஓட்டம்
கியாஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி ஏரிக்கரை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 53). இவர் மீன்சுருட்டி கடைவீதியில் இரவு நேர டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த டிபன் கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் தீப்பற்றி எரிந்தது.
இதனால் சிலிண்டர் வெடித்து விடுேமா? என்ற அச்சத்தில் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இது பற்றி ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த பாலமுருகன், பங்காரு ஆகியோர் உடனடியாக கியாஸ் சிலிண்டர் அருகே சென்று மண் மற்றும் சாக்கு ஆகியவற்றை கொண்டு தீயை அணைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அங்கு வந்து, கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பான முறையில் அகற்றி கியாஸ் கசிவதை தடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த சில நாட்களாக கியாஸ் சிலிண்டர்களின் ரெகுலேட்டர் சரியாக இல்லாத காரணத்தால், இதுபோன்று அடிக்கடி கியாஸ் கசிவு ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story