சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்


சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 15 March 2021 1:42 AM IST (Updated: 15 March 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பழுவூர் அருகே சரக்கு வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கீழப்பழுவூர்:

வாகன சோதனை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கீழப்பழுவூர் அருகே துணை தாசில்தார் பிரபாகரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருமழபாடி பிரிவு ரோட்டில் இருந்து வந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த சரக்கு வேனில் ரூ.60 ஆயிரத்து 300 கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
இது பற்றி சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் அரியலூர் மாவட்டம் சேனாபதி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜனின் மகன் கௌஷிக் என்பதும், அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் சரக்கு வேன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Next Story