ஈரோடு மீன் மார்க்கெட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


ஈரோடு மீன் மார்க்கெட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2021 1:51 AM IST (Updated: 15 March 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மீன் மார்க்கெட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாாிகள் அபராதம் விதித்தனா்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டோனி பாலம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்தவர்களில் பலர் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து முக கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல் மணல்மேடு பகுதி வழியாக சென்ற பஸ்களையும் தடுத்து நிறுத்தி, பயணிகள் முறையாக முக கவசம் அணிந்து உள்ளனரா? என்று சோதனை நடத்தினர். அப்போது சில பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பஸ்சின் கண்டக்டருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 3-வது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் சுமார் ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் விதிமுறையை மீறியதாக 4 கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது’ என்றார்.

Next Story