சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இரண்டாம் வார பூச்சொரிதல் விழா
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இரண்டாம் வார பூச்சொரிதல் விழா.
சமயபுரம்,
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல்விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த வாரம் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து இரண்டாவது வாரமான நேற்று 21-ம் ஆண்டாக புதுத்தெரு மக்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக அங்குள்ள முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு புதுத்தெருவில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் முத்துமாரி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பூத்தட்டுக்களை சுமந்து கடைவீதிவழியாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வழிபட்டனர்.
Related Tags :
Next Story