தேர்தல் பணி அலுவலர்களுக்கு 2-வது நாளாக பயிற்சி
தேர்தல் பணி அலுவலர்களுக்கு 2-வது நாளாக பயிற்சி
மதுரை
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தினத்தில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தனித்தனி இடங்களில் தொகுதி வாரியாக இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மதுரை மத்திய தொகுதிக்காக தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்தல் தினத்தில் எவ்வாறு பணி செய்ய வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எப்படி கையாளுவது என்பது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து வீடியோ காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story