படிப்படியாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு
படிப்படியாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு
மதுரை
மதுரையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா
மதுரையில் 2 தினங்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக 10-க்கும் குறைவான பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், தற்போது அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக சிகிச்சையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிரிக்கிறது. நேற்று மதுரையில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் நகர் பகுதியையும், மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 360 ஆக உள்ளது. இதுபோல் நேற்று 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மொத்தமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 829 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 70 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். 461 பேர் இறந்திருக்கிறார்கள்.
கொரோனா படிப்படியாக அதிகரிக்குமா என்பது குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், மதுரையில் கொரோனா கட்டுக்குள் தான் இருக்கிறது. மீண்டும் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் பல்வேறு கட்டங்களாக ஆலோசித்து வருகிறோம். அவர்கள் கூறும் அறிவுரையின்படி அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். எனவே பொதுமக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த தங்களால் முடிந்தவரை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
கண்காணிப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மிகக்குறைவாக இருந்தது. தற்போது மீண்டும் அதிகரிப்பது போல் இருக்கிறது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து மதுரைக்கு வரும் நபர்களை கண்காணித்து வருகிறோம். அதுபோல், விமானத்தின் வழியாக மதுரை வரும் நபர்களின் விவரங்களை கைப்பற்றி, அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
எனவே அரசின் இந்த முயற்சிக்கு யாரும் அலட்சியம் எதுவும் காட்டக்கூடாது. அதுபோன்ற அரசின் வழிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை முழுமையாக குறைக்கமுடியும். விழிப்புணர்வுடன் இருந்து பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story