பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 15 March 2021 2:11 AM IST (Updated: 15 March 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

பெருந்துறை
பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
 ஆடு விற்பனை
பெருந்துறை வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இந்த சந்தைக்கு, திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி, முத்தூர், பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200 செம்மறி ஆடுகள், 300 வெள்ளாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
நேற்றைய சந்தையில், பெரிய வெள்ளாடு ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. சிறிய வெள்ளாடு ஒன்று ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 
ரூ.27 லட்சம்
இதேபோல் பெரிய செம்மறி ஆடு ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், சிறிய செம்மறி ஆடு ஒன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.  
ஆடுகள் மொத்தம் ரூ.27 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆடுகளை, பெருந்துறை, திங்களூர், விஜயமங்கலம், காஞ்சிக்கோவில், சென்னிமலை, வெள்ளோடு, அறச்சலூர், குன்னத்தூர், ஊத்துக்குளி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த விவசாயிகளும், ஆடு வளர்ப்போரும் வாங்கி சென்றனர். 

Next Story