திருச்சி மாவட்டத்தில் தொகுதி ஒதுக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டத்தில் தொகுதி ஒதுக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருச்சி,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒரு தொகுதிக்கூட ஒதுக்கப்படாததை கண்டித்து திருச்சி அருணாச்சலமன்றம் அருகே காங்கிரஸ் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ் தங்கராஜன் தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சேகர், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி வழங்காமல் புறக்கணித்தது கிடையாது. தற்போது ஒரு தொகுதிகூட வழங்கப்படாததால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்படி இருந்தால் கட்சியை எப்படி வளர்க்க முடியும். திருச்சி மாவட்டத்துக்கு தொகுதிகளை ஒதுக்காததை கண்டித்தும், தொகுதியை கேட்டு பெறாத மாநில தலைவருக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்” என்றனர்.
Related Tags :
Next Story