குடும்பம் நடத்த மனைவி மறுப்பு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பம் நடத்த மனைவி மறுப்பு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் திருவடி தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டது. இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி, சீனிவாசன் மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு தொலைபேசியில் அழைத்தார். அதற்கு அவர் வரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனிவாசன் நேற்று முன்தினம் வீட்டில் மனைவியின் சேலையால் மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story