வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள இடங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள இடங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்தார்.
கோவை
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் உப்பிலிபாளையம் பாஸ்போர்ட் அலுவலகம், வடகோவை மாநகராட்சி பள்ளி, ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, ராம்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 8 இடங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள இடங்களில் போடப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் போலீசாருக்கு பணியின்போது கடைப்பிடிக்க வேண்டியது என்ன என்பது குறித்த அறிவுரைகளை வழங்கினார். அப்போது சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஸ்டாலின் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story