கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 32 பேர் கைது
கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடை பெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. சுவர் விளம்பரங்கள், பேனர்கள் வைக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும் அரசியல் கட்சியினரின் வாகனங்களில் பொருத்தி உள்ள கட்சி கொடிகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதை போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், கே.ஜி.சாவடி, தொண்டாமுத்தூர், சூலூர், பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்பட புறநகர் பகுதிகளில் அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
32 பேர் கைது
அப்போது அங்கு பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரம், பேனர்கள், வாகனங்களில் கட்சிக் கொடியுடன் வலம் வந்தவர்கள் மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய அலுவலகத்தின் 100 மீட்டருக்கு உட்பட்ட பகுதியில் கட்சி சின்னங்களைக் கொண்டு வந்தவர்கள் என அ.தி.மு.க, பா.ஜனதா, தி.மு.க, அ.ம.மு.க, தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 32 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அந்தந்த பகுதிகளில் இருந்த சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story