வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக சிறப்பு முகாம்: புதிய வாக்காளர்களுக்கு மின்னணு அடையாள அட்டை
புதிய வாக்காளர்களுக்கு மின்னணு அடையாள அட்டை
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அட்டை இணையதளம் மூலம் வழங்கும் முகாம் 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகளிலும் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்களுக்கு அதற்கான ஆவணங்களை காண்பித்து உடனடியாக மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில், மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று 2-வது நாளாக சிறப்பு முகாம் நடந்தது. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டனர்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் சகாதேவபுரம் மாநகராட்சி பள்ளியில் நடந்த சிறப்பு முகாமில், இளம் வாக்காளர்கள் அதற்கான சான்றிதழ்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் காண்பித்தனர். இதையடுத்து அவர்களுக்கு மின்னணு வாக்காளர் அட்டைகளை சம்பந்தப்பட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் வழங்கினர்.
Related Tags :
Next Story