கோவில்பட்டி புற்றுக்கோவிலில் காரடையான் நோன்பு சிறப்பு பூஜை
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பங்குனி மாத பிறப்பு காரடையான் நோன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பங்குனி மாத பிறப்பு காரடையான் நோன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாசியும், பங்குனியும் இணையும் நாள் சாவித்திரி தன் கணவன் நீண்ட ஆயுளுடனும், தான் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாசியும், பங்குனி இணையும் நாளில் இந்த நோன்பை கடைபிடித்ததாக கூறப்படுகிறது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவ சேன சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாரதணை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் சன்னதியில் நோன்பு அடை, வெண்ணெய், மஞ்சள் சரடு, பழவகைகள் படைத்து பூஜை நடைப்பெற்றது. விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நோன்பு அடை, மஞ்சள் சரடு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story