கழுகுமலையில் விபத்தில் முதியவர் பலி


கழுகுமலையில் விபத்தில் முதியவர் பலி
x
தினத்தந்தி 15 March 2021 5:56 PM IST (Updated: 15 March 2021 5:56 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் நடந்த விபத்தில் முதியவர் பலியானார்.

 கழுகுமலை:
கழுகுமலை கிட்டங்கி தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 65). இவர், நேற்று காலை 9 மணி அளவில் மொபட்டில் செல்லும்போது பழங்கோட்டை ரோடு தீப்பெட்டி தொழிற்சாலை முன்பு உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கழுகுமலை இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story