கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்புமனு தாக்கல்


கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 15 March 2021 7:13 PM IST (Updated: 15 March 2021 7:13 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் இருந்து நேற்று அவர் கூட்டணி கட்சியினருடன் கோவில்பட்டி மெயின் ரோடு, மாதா கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு உதவி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கர நாராயணனிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கடம்பூர் ராஜூவின் மனைவி இந்திரா காந்தி மனு தாக்கல் செய்தார்.  
பேட்டி
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராகவும், 2016-ம் ஆண்டு தேர்தலில் வென்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறேன். 
தொடர்ந்து 10 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை பெற்று தந்துள்ளேன். வருகிற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழக்கக்கூடிய வகையில் சிறப்பான வெற்றியை பெறுவேன். தேர்தல் ஆணையம் என் மீது பதிவு செய்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story