ராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் புதிய பஸ்நிலைய வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்கவும், தேர்தல் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் நடைபெறவும், மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதை உறுதி செய்தல் போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்கள் மற்றும் பஸ்களில் ஒட்டி விழிப்புணர்வு பணிகளை மேற் கொண்டனர். பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சிவகாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story