குடிமங்கலம் அருகே பொன்னேரியில் உள்ள தடுப்பணையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசடைந்து வருகிறது.
குடிமங்கலம் அருகே பொன்னேரியில் உள்ள தடுப்பணையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசடைந்து வருகிறது.
குடிமங்கலம்,:
குடிமங்கலம் அருகே பொன்னேரியில் உள்ள தடுப்பணையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசடைந்து வருகிறது. இதனால் அந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
தடுப்பணைகள்
குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது கிணறுகள், குளம், குட்டை, தடுப்பணைகள் உப்பாறு ஓடை ஆகும். குடிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் 80-க்கு மேற்பட்ட குளம், குட்டை, தடுப்பணைகள் உள்ளன. குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்வழித்தடங்களிலும், பாரு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நீர் வழித்தடங்களில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பணைகளை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதால் மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் வரும்போது, தண்ணீர் அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் பாதிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் விவசாயத்துடன் இணைந்து தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது.
நடவடிக்கை
கோடைகாலங்களில் தடுப்பணைகளில் தேங்கியுள்ள நீர் கால்நடைகளுக்கு பயன்படுகிறது. நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசடைந்து விடுகிறது. கால்நடைகள் மாசடைந்த நீரை குடிக்கும் போது பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. பல பகுதிகளில் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு களாலும், முறையாகப் பராமரிக்கபடாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது.
தடுப்பணைகளை சுற்றியுள்ள பகுதிகள் விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரி ஊராட்சியில் நீர் வழித்தடத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் குப்பைகள் கழிவுகள் தேங்கி நீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும் அதன் அருகில் செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகங்கள் நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story