பெதப்பம்பட்டி அருகே புதியதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பெதப்பம்பட்டி அருகே புதியதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
x
தினத்தந்தி 15 March 2021 9:21 PM IST (Updated: 15 March 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

பெதப்பம்பட்டி அருகே புதியதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

குடிமங்கலம்:-
பெதப்பம்பட்டி அருகே புதியதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் சேதம் அடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
உயர்மட்ட பாலம்
பொள்ளாச்சியில் இருந்து பெதப்பம்பட்டி வழியாக தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. 
இந்த சாலை வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன. பொதுமக்கள் வசதிக்காக பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. 
மழைக்காலங்களில் பாலத்தைத் தாண்டி தண்ணீர் செல்லும் போது சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 
இதனை தொடர்ந்து உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் பெதப்பம்பட்டி அருகே ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிலையில் பாலத்தின் மேல் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. பாலத்தின் நடுவில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் பாலம் பலம் இழக்கும் நிலை உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது :-
பெதப்பம்பட்டி அருகே புதிய பாலம் கட்டி சில ஆண்டுகள் ஆன நிலையில் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பொள்ளாச்சி-தாராபுரம் சாலை மாநில நெடுஞ்சாலை என்பதால் இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் பாலத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே பாலம் சேதம் அடைந்து வருகிறது. சேதமடைந்த பகுதியில் தற்காலிகமாக தார் கொண்டு பூசியுள்ளனர். இருந்தபோதிலும் கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. எனவே பழுதான பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். 
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Next Story