உடுமலை வாக்குச்சாவடிக்கு படிவங்களை கொண்டு செல்ல பைகளில் நம்பர் எழுதும் பணி
உடுமலை வாக்குச்சாவடிக்கு படிவங்களை கொண்டு செல்ல பைகளில் நம்பர் எழுதும் பணி
உடுமலை:-
உடுமலை சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குச்சாவடிகள் மற்றும் 87 துணை வாக்குச்சாவடிகள் என மொத்தம் 380 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான கையேடுகள், படிவங்கள், தபால் வாக்கு உறைகள் உள்ளிட்ட பொருட்களை வைத்துக்கொண்டு செல்வதற்கு பெரிய பைகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பைகளில் முன்பகுதியில் வட்டமிடப்பட்டு, அதற்குள் சட்டமன்றத்தொகுதியின் எண்ணான 125 என்று எழுதப்பட்டு அதற்குக்கீழே வாக்குச்சாவடியின் எண் எழுதப்பட்டது. உடுமலை தாலூகா அலுவலகத்தில் நடந்த இந்த பணிகளை பணியாளர்கள் மேற்கொண்டனர். இந்த பணிகள் உடுமலை சட்டமன்றத்தொகுதி உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் வி.ராமலிங்கம், தலைமையிடத்து துணை தாசில்தார் விஷ்ணு, தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
Related Tags :
Next Story