விக்கிரவாண்டி, செஞ்சியில் 2 பேரிடம் இருந்து ரூ.2¾ லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
விக்கிரவாண்டி, செஞ்சியில் 2 பேரிடம் இருந்து ரூ.2¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் நஜீர் தீன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனபால், ஏட்டுகள் சண்முக சுந்தரம், அமுதா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை பனமலை கிராமத்தில் பனமலை ஏரி மதகு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை அவர் எடுத்து வந்தது தெரியவந்தது. மேற்கொண்டு அதிகாரிகள் விசாரித்த போது, மோட்டார் சைக்கிளில் வந்தவர் விழுப்புரம் கே.கே. ரோட்டை சேர்ந்த, பைனான்சியர் பொன்னையா (வயது 52) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விக்கிரவாண்டிதொகுதி உதவி தேர்தல் அலுவலர்கள் அறிவுடைநம்பி, தமிழ்செல்வி ஆகியோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, தலைமையிடத்து துணை தாசில்தார் ரேவதி, வருவாய் உதவியாளர்கள் தையல்நாயகி, சங்கீதா ஆகியோர் பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
செஞ்சி
இதேபோல் செஞ்சி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பறக்கும் படை அலுவலர் தனசேகர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் கடலாடி குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்ததில் அதில் சென்ற சென்னை குரோம்பேட்டை சேர்ந்த குள்ளன் மகன் கோவிந்தன் (வயது 47) என்பவர் ரூ 1 லட்சத்து 70 ஆயிரம் எடுத்துச் சென்றார்.
அதற்கு எந்தவித ஆவணமும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை கைப்பற்றி செஞ்சி தேர்தல் தாசில்தார் ராஜனிடம் ஒப்படைத்தனர்
Related Tags :
Next Story