நாய் குறுக்கே வந்ததால் விபத்து; மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் பலி
போடி அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலியானார்.
போடி:
போடி பங்கஜம் பிரஸ் தெற்குத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணகுமார். இவரது மனைவி வினிதா (வயது 22). கணவன்-மனைவி 2 பேரும் நேற்று வீரபாண்டியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். போடி-உப்புக்கோட்டை சாலையில் விசுவாசபுரம் என்ற இடத்தின் அருகே அவர்கள் வந்தபோது, நாய் ஒன்று குறுக்கே வந்தது. அப்போது அந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறிய லட்சுமணகுமாரும், வினிதாவும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் வினிதா மட்டும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வினிதா பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story