சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
சங்கராபுரம்
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி செல்லதுரை தலைமையில் போலீஸ் ஏட்டுகள் சங்கரநாராயணன், சுந்தரேசன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை-செம்பராம்பட்டு பிரிவு சாலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை வழிமறித்து சோதனை செய்தனர்.விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பதும், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.60 ஆயிரம் எடுத்து வந்ததும், இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் புதுப்பாலப்பட்டு, காட்டுகொட்டாயைச் சேர்ந்த குப்புசாமி மகன் மணி என்பதும் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரிடமும் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத்காதரிடம் ஒப்படைத்தனர். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யநாராயணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் கல்யாணி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story