கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனு தாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனு தாக்கல்
கள்ளக்குறிச்சி
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல்நாளில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் செந்தில்குமார்(அ.தி.மு.க.), திராவிட முத்தமிழ்ச் செல்வி(நாம் தமிழர் கட்சி), சூரியபிரகாஷ்(சுயேட்சை) ஆகிய 3 பேரும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் குமரகுரு(அ.தி.மு.க.), இவரது மனைவி மயில்மணி (அ.தி.மு.க. மாற்று வேட்பாளர்) ஆகிய 2 பேரும், சங்கராபுரம் தொகுதியில் ரஜியாமா (நாம்தமிழர் கட்சி), மன்னன்(சுயேட்சை) ஆகிய 2 பேரும், ரிஷிவந்தியம் தொகுதியில் சந்தோஷ்(அ.தி.மு.க.), வசந்தம் கார்த்திகேயன்(தி.மு.க.), வேலுச்சாமி (தி.மு.க. மாற்று வேட்பாளர்), சுரேஷ் மணிவண்ணன்(நாம் தமிழர் கட்சி), பிரபு(அ.ம.மு.க.), விக்ரமன்(அ.ம.மு.க. மாற்று வேட்பாளர்) உள்பட 6 பேரும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இதுவரை 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story