நேர்மையாக நடத்த அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
சட்டமன்ற தேர்தலை நேர்மையாக நடத்த அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெய்வேலி,
சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் பேசியதாவது:- சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை அரசியல் கட்சியினர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், வாகனங்களில் கட்சி கொடிகளை கட்டக்கூடாது. பேரணி அல்லது பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால் போலீசார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். வாக்கு சேகரிக்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
ஒத்துழைப்பு
சாதி, மத மோதலை ஏற்படுத்தும் வகையில் கூட்டங்களில் பேசக்கூடாது, சட்டமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story