திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்ெகன தனித்தனியாக 8 இடங்களில் வேட்பு மனு தாக்கல் நடந்தது. 2-வது நாளான நேற்று 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 11 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது. வேட்பு மனு தாக்கல் நடக்கும் தாலுகா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
செங்கத்தில் 5 வேட்பாளர்கள் 8 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திருவண்ணாமலையில் 4 வேட்பாளர்கள் 8 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். கீழ்பென்னாத்தூரில் 5 வேட்பாளர்கள் 5 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். கலசபாக்கத்தில் 7 வேட்பாளர்கள் 10 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
போளூரில் 3 வேட்பாளர்கள் 9 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆரணியில் 5 வேட்பாளர்கள் 5 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். செய்யாறில் 2 வேட்பாளர்கள் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் மட்டும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story