கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2021 11:29 PM IST (Updated: 15 March 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும், கிராம வங்கிகளும் இயங்கவில்லை. இந்த நிலையில் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க செயலாளர் சேகர், மற்றும் பொன் மகாராஜா, அசோக்குமார், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ஜெகநாதன், இந்திய வங்கி ஊழியர் சங்க செயலாளர் சந்துரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் ஹரிராவ் நன்றி கூறினார். இதில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Next Story