மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா


மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா
x
தினத்தந்தி 15 March 2021 11:38 PM IST (Updated: 15 March 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

கரிசல்பட்டியில் உள்ள ஹஜ்ரத் மேல்கரை பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள ஹஜ்ரத் மேல்கரை பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. முன்னதாக மதியம் கந்தூரி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து குதிரைகள் நடனமாட, வாணவேடிக்கைகளுடன் கொடி ரதம் மச்சுவீடு அம்மா தர்காவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஹஜ்ரத் மேல்கரை பீர்சுல்தான் ஒலியுல்லா கொடிமரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். வருகிற 23-ந்தேதி இரவு மதநல்லிணக்க உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.

Next Story