ஒகேனக்கல்லில் சாலையை கடக்கும் யானைகள்
ஒகேனக்கல்லில் யானைகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு ஆகிய வனப்பகுதிகளில் சுற்றித்திரிந்த யானைகள் குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வர தொடங்கி உள்ளன. நேற்று ஒகேனக்கல் முண்டச்சிபள்ளம் வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் அங்குள்ள சாலையை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர். யானைகள் சாலையை கடந்து சென்ற பிறகு அவர்கள் புறப்பட்டு சென்றனர். யானைகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story