குளத்தில் ஆண் பிணம்
வேடசந்தூர் அருகே குளத்தில் ஆண் பிணம் கிடந்தது
திண்டுக்கல்:
வேடசந்தூர் அருகே முதலியார்பட்டியில் உள்ள குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
தகவலறிந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிராமலிங்கம் தலைமையிலான வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் குளிக்கும்போது குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story