மதுபாட்டில்களை மாலையாக அணிந்து மனு தாக்கல் செய்த வேட்பாளர்
மதுபாட்டில்களை மாலையாக அணிந்து மனு தாக்கல் செய்த வேட்பாளர்
மதுரை
மதுரை செல்லூர் பூந்தமல்லி நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டி (வயது 35). டைல்ஸ், மார்பிள்ஸ் வேலை செய்து வருகிறார். சமூக ஆர்வலரான இவர் நேற்று மதுரை வடக்கு தொகுதியில் மதுபாட்டில்களை மாலையாக அணிந்து சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். மேலும் அவரது கையில் ஒரு தட்டில் ஒரு ரூபாய் நோட்டுகள், மதுபாட்டில்கள், தாலிக்கயிறு ஆகியவற்றுடன் மனு தாக்கல் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், மதுக்கடைகளை அடைத்து விடுவோம் என கூறிக்கொண்டு நாளுக்குநாள் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மதுக்கடைகளை அடைக்க வேண்டும், 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக நூதனமுறையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு, ஓட்டுக்கு பணம் அவமானம், லஞ்சம், ஊழல் ஒழிப்போம் அரசின் கடன் சுமையை குறைப்போம் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story