மதுபாட்டில்கள் வைத்திருந்தவர்கள் கைது
மதுபாட்டில்கள் வைத்திருந்தவர்கள் கைது
பேரையூர்
சேடப்பட்டி போலீசார் அழகுரெட்டிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைசேர்ந்த ஜெயராமன் என்பவர் தனது பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக 11 மதுபாட்டில்களை வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் கணவாய்பட்டியை சேர்ந்த ஒச்சாதேவன் என்பவர் தனது பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக 9 மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். சாப்டூரை சேர்ந்த பாண்டி என்பவர் வடகரைபட்டி சுடுகாட்டில் விற்பனை செய்வதற்காக 7 மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது சாப்டூர் போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story