ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் டி.ஆர்.இ.யூ. ரெயில்வே தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யூ. மாநகர், புறநகர் சார்பில் மதுரை ரெயில் நிலையம் மேற்கு நுழைவு வாயிலில் அருகில் நடைபெற்றது. டி.ஆர்.இ.யூ. கிளைச் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன், மாநகர் மாவட்ட செயலாளர் இரா.தெய்வராஜ், சங்கத்தின் மதுரை கோட்ட பொதுச் செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் புறநகர் மாவட்ட தலைவர் கண்ணன் மற்றும் புறநகர், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணன், இரா.லெனின், சந்தியாகு உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story