மதுவிற்ற 3 பேர் கைது
மதுவிற்ற 3 பேர் கைது
சாத்தூர்,
இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஸ்டீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரைேயாரம் மதுவிற்ற ஏழாயிம்பண்ணையை சேர்ந்த தங்கபாண்டி (வயது33) என்பவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதைபோல சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் பெரிய கொல்லபட்டி விலக்கு அருகில் வைத்து மதுவிற்ற அமீர்பாளையத்தை சேர்ந்த மாரிப்பாண்டி (28) என்பவரிடம் இருந்து 8 மதுபாட்டில் மற்றும் கண்மாய் சூரங்குடியில் வைத்து மதுவிற்ற மாரியப்பன் (53) என்பவரிடம் இருந்து 6 மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story