விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே முகவூர் கிராமத்தில் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி முகவூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணிக்கு ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சத்தியவாணி, மண்டல அலுவலர் மதன்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் முத்துராஜ், தலைமை ஆசிரியை அருள்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி பஞ்சாயத்து அலுவலகம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணை தலைவர் சுரேஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story