நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டம்


நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2021 2:07 AM IST (Updated: 16 March 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டம் நடந்தது.

நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்ட, மாநகர நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நெல்லை டவுனில் நடந்தது. மாவட்ட தலைவர் தேவ சேனாபதி, மாநகர தலைவர் கலீல் அகமது ஆகியோர் தலைமை தாங்கினார்கள். காதர் முகைதீன், சுடலை காசி, குத்தாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துக்குமரன் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் அருள் இளங்கோ ஆண்டு அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மண்டல தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன், நெல்லை மாவட்ட வர்த்தக கழக தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் எம்.ஆர். குணசேகரன், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடேஷ், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பழனியப்பன், துணைச் செயலாளர் நெல்லையப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 
கூட்டத்தில், ஜி.எஸ்.டி. புதிய நடைமுறையை எளிமையாக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 2 அல்லது 3 பிரிவுகளாக பிரித்து அவற்றுக்கு தனித்தனியாக வினியோகஸ்தர்கள் நியமனம் செய்வதை இந்த பொதுக்குழு கண்டிக்கிறது. மாநில நிர்வாகிகளை வணிகர் நல வாரியத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆஷிக் அலி நன்றி கூறினார்.

Next Story