பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2021 2:18 AM IST (Updated: 16 March 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்:
டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் நேற்று மாவட்டத்தில் பொக்லைன் எந்திரங்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பொக்லைன் எந்திர உரிமையாளர் சங்கத்தின் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. டீசல் விலை உயர்வால் இனி பொக்லைன் எந்திரம் ஒரு மணி நேரம் இயக்குவதற்கு ரூ.1,200 வசூலிக்கப்படும் என்று அச்சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story