முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் மீண்டும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) செந்தில், (கிராம ஊராட்சிகள்) அகிலா ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மொத்தம் 34 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story