தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஏற்பாடு
கடந்த மாதம் 26-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் வருகிற 19-ந் தேதி ஆகும்.
20-ந் தேதி வேட்புமனுபரிசீலனை நடக்கிறது. சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 22-ந் தேதி வெளியிடப்படும்.
நியமனம்
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,370 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
மேலும் 7 தொகுதிகளிலும் 11,736 பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் போலீஸ் பார்வையாளரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளர்
அதன் விவரம் வருமாறு:-
ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பொது தேர்தல்பார்வையாளராக தேவேந்திர குமார் சிங் குஷ்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9897583890. சாத்தூர் மற்றும் சிவகாசி தொகுதிக்கு பிரபன்ஷுகுமார் ஸ்ரீ வத்சவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9568 822000.
விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு விஜயகுமார் ஜனுஜா நியமிக்கப்பட்டுள்ளார் இவரது செல்போன் எண் 9592564371. திருச்சுழி தொகுதிக்கு சுரேந்திரபிரசாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் இவரது செல்போன் எண் 9455817348.
செலவின பார்வையாளர்
செலவின பார்வையாளர்களாக ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு அயஸ் அகமது கொஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 981028 6644. சாத்தூர் தொகுதிக்கு முகமது அலி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 888672 7190.
சிவகாசி மற்றும் விருதுநகர் தொகுதிகளுக்கு லாவிஷ் ஷெல்லி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9530400152. அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி தொகுதிகளுக்கு நான்சிங்குமார் கால்கோ நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன்எண் 898691 2295. போலீஸ் பார்வையாளர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போலீஸ் பார்வையாளராக பஜனிராம் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்போன் எண் 9554400165. மேற்கண்ட பார்வையாளர்களை 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
புகார்
எனவே இத்தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பொது புகார்கள் மற்றும் செலவு தொடர்பான புகார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றிய புகார்கள் பற்றி அந்தந்த பார்வையாளர்களிடம் நேரடியாகவோ அல்லது அவர்களது செல்போன் மூலமோ தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், செலவின பார்வையாளர்களாக ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளும், போலீஸ் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story