புகைப்பட நிபுணர் திடீர் சாவு


புகைப்பட நிபுணர் திடீர் சாவு
x
தினத்தந்தி 16 March 2021 2:19 AM IST (Updated: 16 March 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

புகைப்பட நிபுணர் திடீரென இறந்தார்.

ஆண்டிமடம்:
திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 32). புகைப்பட நிபுணரான இவர் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி தரையில் அமர்ந்தார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆண்டிமடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராஜாவின் உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ராஜாவின் தந்தை பால்ராஜ் ஆண்டிமடம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க வந்தவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story