ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்


ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 16 March 2021 2:19 AM IST (Updated: 16 March 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள செல்வ கணபதி மற்றும் சந்தோஷ ஆஞ்சநேயர் கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. பின்னர் முதல் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று விநாயகர் பூஜை, சூரிய பூஜை, கோ பூஜை, பிம்பசுத்தி ஆகிய இரண்டாம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, செல்வகணபதி மற்றும் சந்தோஷ ஆஞ்சநேயர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story